காட்டு யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்கும் நுழைந்தது. இந்த காட்டு யானை சாலையில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.