உக்ரைன் நாட்டிலிருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ டொனெட்ஸ்க் நகரிலுள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
உக்ரேன் நாட்டின் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா போரிட்டு வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின வசம் உக்ரைன் நாட்டின் பெரும்பகுதி சென்றுள்ளது. அதன்படி உக்ரேன் நாட்டிலுள்ள செவரோ டொனெட்ஸ்க் நகரின் பெரும் பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் செவரோ டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ரசாயன ஆலை மீது கடந்த 1 ஆம் தேதி ரஷ்யப் படைகள் வான்வெளி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இதனால் ரசாயன ஆலையிலுள்ள நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியுள்ளது.
இந்த வாயுவை சுவாசித்தால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பேக்கிங் சோடா கலந்த நீரில் துணிகளை முக்கி காயவைத்து அவற்றை பொதுமக்கள் முகக் கவசங்களாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.