Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு….. வெளியான ஷாக் நியூஸ்….. !!!

ஆன்லைன் பேமென்ட் சேவையில் பேடிஎம் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மொபைல் ரீஜார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். Paytm கூடுதல் கட்டணமாக ரூ.1 முதல் ரூ.6 வரை செலுத்த வேண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வாலட் பேலன்ஸ், யுபிஐ அல்லது வங்கி கிரெடிட்/ டெபிட் கார்ட் மூலம் வசூலிக்கப்படும் மொபைல் ரீசார்ஜ்க்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. ரீசார்ஜ் எவ்வளவு என்பதை பொறுத்து இந்த கட்டணம் இருக்கிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இந்த கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டது என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் பேடிஎம் செயலி மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயனர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அதிக வருவாய் ஈட்டும் முயற்சியில் பேடிஎம் நிறுவனத்தின் உத்திகள் மாறி வருவதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பேடிஎம் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் நுகர்வோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பேடிஎம் நிறுவனத்தின் போட்டியாளரான PhonePe கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.50 மேல் ரீசார்ஜ் ‘செயலாக்கம் கட்டணம்’ என்ற பெயரில் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கூடுதல் கட்டணங்களின் சுமையை குறைக்க வாடிக்கையாளர்கள் கூகுல் பே மற்றும் அமேசான் பே போன்ற பிற கட்டண தளங்களில் ரீசார்ஜ் செய்ய தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |