Categories
தேசிய செய்திகள்

உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?…. இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் வைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு எல்லாம் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்பதை பார்ப்பதற்கு நிறைய வசதிகள் வந்துவிட்டன. பேங்க் பேலன்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளை மொபைல் போன் மூலமாகவே தற்போது நாம் பெற முடியும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களுடைய பேங்க் பேலன்ஸ் பார்ப்பதற்கு 09223008586 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அப்படி மிஸ்டுகால் கொடுத்தவுடன் கட்டாகிவிடும். அதன் பிறகு உடனடியாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும்.

Avl Bal in Your A/c XXXXXXXXXXX04222 is INR Cr 1461.95 as on 12-06-2022 10:10:59 AM IST .

அதனை போல எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக உங்களுடைய பேங்க் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு மொபைல் நம்பரிலிருந்து UBAL என்று டைப் செய்து 09223008486 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு மினி ஸ்டேட்மெண்ட் பார்ப்பதற்கு UMNS என்று டைப் செய்து இந்த நம்பருக்கு அனுப்பினால் போதும் அனைத்து தகவல்களையும் நீங்கள் விரைவில் பெற முடியும்

Categories

Tech |