கும்பம் ராசி அன்பர்களே, இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள்,. சுயலாபத்திற்காக சிலர் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவார்கள். இன்று கவனமாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும்.
இன்று பணவரவு அளவான பணவரவு இருக்கும், வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமூகமாக பேசி பழகுவது ரொம்ப நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும், குடும்ப கவலை தீரும், மனக்குழப்பம் நீங்கும், முக்கிய முடிவுகள் இன்று நீங்கள் எடுக்கக் கூடும்.
உங்களுடைய தெளிவான சிந்தனையை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித சிரமமும் இல்லாமல் பாடங்களை படிப்பார்கள். கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்ல செல்வத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீலம்