கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் 22 ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்ததையடுத்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கெட்டியம்மாள்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் நம்பி என்பவரிடமிருந்து கடன் வாங்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சென்று 9ஆம் தேதி போலீசார் நம்பியை கைது செய்தார்கள்.
இதையடுத்து நம்பியின் வீட்டை போலீசார் சோதனை செய்ததில் தொகை நிரப்பப்படாமல் கையெழுத்து மட்டும் போட பட்டிருந்த 6 காசோலைகள் உள்பட 26 காசோலைகள், காசோலை புத்தகம், கடன் பெற்றோரின் 3 ஏடிஎம் கார்டுகள், கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டிய வெறும் பத்திரம், காசோலை மோசடி சார்ந்த ஆவணம் என 22 ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தார்கள். இதையடுத்து நம்பியை போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.