Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. அரசு போட்ட மாஸ்டர் பிளான்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் பள்ளிக்குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி வருவதால் அதற்கு மாற்றாக சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது பள்ளிகளில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை கொண்டு இளம் வாசகர்கள் இணைக்கப்படுவார்கள். அத்துடன் குழந்தை எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் பள்ளிகளுக்கு அழைக்கப்பட உள்ளனர். புத்தக நன்கொடையும் ஊக்குவிப்பு செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த புதிய திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |