Categories
தேசிய செய்திகள்

“என்னை கொன்று விடுங்கள்”…. கதறும் முக்கிய பிரபலம்…. பெரும் பரபரப்பு….!!!

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கும் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ” என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது, என்னை கொன்று விடுங்கள், அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என்று செய்தியாளர்களிடம் கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ், அப்படியே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்ததால் தற்போது இவருக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |