3 மாத பெண் குழந்தையின் மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிச்சானந்தல் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விஜய் அந்த பெண் குழந்தையை வீட்டின் தரையில் படுக்க வைத்திருந்தார். அப்போது வீட்டின் பரணில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாரதவிதமாக தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் குழந்தையை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.