Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டிப்பாக செய்வேன்…. கமல் வாக்குறுதியால் ரசிகர்கள் மகிழ்ச்சி…. என்னன்னு பாருங்க….!!!

நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அரசியல் சாணக்கியராகும் கமல்.. மக்கள் நீதி மய்யம் 2.O-க்கு அட்டகாசமான  வியூகம் ரெடி.. பரபர பின்னணி | MNM Chief Kamal Haasan soon to announce his  new plan to strengthen his party ...

மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்கு காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கும் கமல்ஹாசன் அன்பு பரிசை வழங்கினார்.

 

இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில், ‘உங்களை தொடர்ந்து சினிமாக்களின் மூலம் என்டர்டைன்மென்ட் செய்வதுதான் உங்களுக்கு செய்யும் பதில் நன்றி’ என கூறியுள்ளார். கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என கூறியதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |