தமிழகம் முழுவதும் இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வருவது குறித்து அறிவிப்பு வந்தால் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மன ரீதியாக, உளவியல் ரீதியாக அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் நாளை பள்ளிக்கு செல்லவேண்டும். யாருமே லீவ் போடக்கூடாது. பள்ளிகளில் யோகா நடத்துவது பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.