Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு.. வருமானம் பன்மடங்கு உயரும்.. வசீகர தன்மை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும், உண்மை நேர்மைக்கு  முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும், பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும், மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.  குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும்.
குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும், கணவன் மனைவிக்கு இடையே சகஜமான நிலையே காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும், அந்த வருகை கொஞ்சம் செலவை ஏற்படுத்தும். யாரிடம் பேசும்பொழுதும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் பண்ணாதீர்கள். அதுமட்டுமில்லாமல் பணக்கடன் மட்டும் இன்று  வாங்காதீர்கள். அதேபோல இன்று நேர்த்தியான ஆடை அணிந்து அனைவரையும் கவரும் விதமாகவே இருப்பீர்கள். இன்று  உங்களுடைய வசீகரத் தன்மை அனைவரையும் கவரும், காதலில் பயப்பட கூடிய சூழல் இருக்கிறது. இன்று  மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மனநிலையை அடையக்கூடும்.
மற்றவரின் ஆதரவும், ஆசிரியர்களின் ஆதரவும், முழு ஆதரவும், உங்களுக்கு கிடைக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம்  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:  3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |