தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் தூத்துக்குடியில் தனியார் பள்ளி பேருந்துகளில் கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.