Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 லட்சத்து 40 ஆயிரம் இடம் காலியாக உள்ளது…. ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள்….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நமது தமிழ்நாட்டில் மொத்தம் 490 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. ஆனால் இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடம் காலியாக உள்ளது.

இதற்கு காரணம் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் பலர் பாலிடெக்னிக் படிப்புக்கு வர முடியாமல் போகின்றது . எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |