மத்திய பிரதேச மாநிலத்தில் சங்கமித்ரா என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் அருகிலுள்ள மார்க்கெட்டிற்கு சென்று உள்ளார். அப்போது கணவர் அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் வாங்க சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சிலர் பைக் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை கிண்டல் செய்தனர். அதனால அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபர்களை அடித்து விட்டார். அதன்பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதால் தனது கணவருடன் அந்த பெண் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது இரண்டு பேரையும் அடிபட்டவர்களில் ஒருவன் பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்களை மடக்கி தன்னிடமிருந்த பிளேடால் அந்தப் பெண்ணின் முகத்தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டான். இதில் படுகாயமடைந்த முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.