தமிழகத்தில் விக்னேஷ் லாக் அப் மரணம் அடங்குவதற்குள் மற்றொரு லாக்கப் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வழக்குகளில் முன்பே சிறை சென்றுள்ள அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். காவலர்கள் கடுமையாக தாக்கியதில் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம் நிகழ்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது