Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. IRCTC ipay ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை…. இதோ முழு விவரம்…!!!!

இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு பெரும்பாலானோர் ரயிலையே தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் சௌகரியம் ஆகவும் குறைந்த விலையிலும் பயணிக்க ரயில் பயணம் சிறந்தது. அவ்வாறு ரயிலில் பயணம் செய்பவர்கள் IRCTC மூலமாக ரயில் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர். பயணிகளுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முதலில் www.irctc.co.in என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

அதன்பிறகு pay and book என்பதை கிளிக் செய்து பணம் செலுத்துவதற்கு கிரெடிட், டெபிட் கார்டு அல்லது யுபிஐ விவரங்களை நிரப்பவும். இதன் மூலம் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் கட்டண விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது. பணத்தை மட்டும் செலுத்தி டிக்கெட்டை நீங்கள் எளிதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வேலையை மொபைலில் எளிதாக நீங்கள் முடித்து விடலாம்.

Categories

Tech |