பாகிஸ்தான் நாட்டில் வசித்து பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் அதன்படி கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கைபர் பக்துங்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்த்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவித் பாஜ்வா தலைமையிலான இராணுவ குழு ஒன்று சீனாவுக்கு கடந்த 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பயணம் மேற்கொண்டது. இதில் சீன ராணுவம் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் பாகிஸ்தானில் மூத்த அதிகாரிகள் விரிவான அளவில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீன தரப்பில் அந்நாட்டு மக்கள் ஆணையத்தின் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்கியா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சர்வதேச மற்றும் மண்டல அளவிலான பாதுகாப்பு சூழ்நிலைகளை பற்றிய தங்களது பார்வைகளை இருதரப்பும் ஆலோசித்தது. அதனைத் தொடர்ந்து சமீப காலங்களாக பாகிஸ்தானில் தொடர்ந்து சீனர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவு ஒன்றை மத்திய காவல் அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமாபாத் போலீசார் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்தினை ஒழிக்கும் பணியை மேம்பட ஒத்துழைப்புடன் செயல்படுத்த இரு தரப்பிலும் உறுதி எடுத்துக்கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் அவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.