நிறைமாத கர்ப்பிணி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்க வலியுறுத்தி டியூப் லைட்டுகளின் மீது நடந்தபடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இலவசமாக கிராமிய கலைகளை கற்றுக்கொடுத்து வருகிறார். இவருக்கு பிரகலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரும் கிராமியக் கலைகளில் ஆர்வமுடையவர். மேலும் பிரகலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பிரகலெட்சுமி நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், குற்ற தண்டனைகளை கடுமையாக்க வலியுறுத்தியும் பறையிசை அடித்தபடி 30 டியூப்லைட்களின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பிரகலெட்சுமி வெறும் கால்களால் டியூப்லைட்களை உடைத்தபடி 3.55 வினாடிகளில் இதனை செய்து முடித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து பிரகலட்சுமி கூறுவதாவது, தற்போது நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்குவது விதமாக சட்டப்பிரிவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.