Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. மாணவர்கள் எளிய வகையில் கல்வி கற்கும் வகையில் அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர் திட்டம் தொடர்பான கைபேசி, செயலி திட்டம் ஆகியவற்றை வெளியிட்டார். இதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆசிரியர் கையேடு , கற்றல், கற்பித்தல் உபகரணம் ஆகியவற்றையும் வழங்கினார்.

 

Categories

Tech |