நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. அதில் காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியை விரைவுபடுத்த, கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.