தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 – 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் திருவள்ளூர் வரை அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார். பள்ளியில் மாணவர்களுடன் பேசிய அவர், பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மாணவர்களுடன் பென்ஞ்சில் அமர்ந்து கவனித்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் அமர்ந்து இருந்தார். மேலும் பள்ளியில் சமையல் அறை மற்றும் கழிவறை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்களுடன் மாணவராக முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.