கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் கொண்டுள்ளார். அவரை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்து கோவைக்கு சென்று அந்த சிறுமியை அழைத்து வந்த பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சிறுமிக்கும் மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியை கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து பாலியல் உறவுக்கு உட்படுத்திய சுரேஷ் மற்றும் அவரது தாய் வளர்மதி, அவரின் தங்கை மற்றும் அவரின் கணவர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் ஏமாறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.