Categories
மாநில செய்திகள்

“இந்தத் திட்டம் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது”….. நாடு பிளவுபடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!!!!!!!

இந்திய மரபில் வாழும் மக்களின் இன தூய்மை மற்றும் மரபியல் தொடர்ச்சியை கண்டறிவதற்கு டிஎன்ஏ ஆய்வு மேற்கொள்ள மத்திய கலாச்சாரத்துறை திட்டமிட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜாதி மற்றும் மத ரீதியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மோதல்கள் என ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் இந்திய சமூகத்தில் இந்த திட்டம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்போது பரவலாக எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் கோவிந்த்  மோகன் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான வசந்த் ஷின்டே மற்றும் லக்னோவில் உள்ள பழங்கால அறிவியல் கல்வி நிலையத்தை சேர்ந்து அறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இது பற்றி கருத்து கூறிய வாசகத்தை மனிதர்களின் மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்கள் எப்படி உருமாற்றம் அடைகின்றது. ஒரு மரபணு வரிசையில் மற்றொரு மரபணு வரிசை கலப்பது எவ்வாறு என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இது இந்திய மக்களின் அனைத்துமே கண்டறிவதற்கான முயற்சியாகவும் பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை இந்த திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் செயற்பாட்டாளர்கள்  அடங்கிய 122 பேர் கொண்ட குழு ஒன்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் மத்திய அரசு திட்டம் அபத்தமானது மட்டுமல்லாமல் மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வருடங்களுக்கு முன்பே இந்த இன மரபு என்பது வழக்கொழிந்து விட்டது இனத்தூய்மை பற்றி எந்த ஒரு ஆய்வும் தற்போது இல்லை எப்போதும் நடத்தக்கூடாது இது குறித்து பகிரங்கமாக மறுப்பை வெளியிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்படுகின்றது.

மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இன தூய்மை  அதிகம் என கூறப்படுபவர்களால்இனத்தூய்மை குறைவாக உள்ளவர்கள் கடும்  இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. சாதி ரீதியாக மக்களை எடைபோடுவது நிறுத்த வேண்டுமென 122 பேர் கொண்ட குழு அறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்களும் இந்த திட்டத்தின் வழியாக எந்த விதமான முடிவை மத்திய அரசு எதிர்நோக்கி செய்வது என்பது பற்றி தங்களுக்கு தெரியவில்லை எனவும் எனது விவகாரத்தில் தலையீட்டால் இந்தியர்களுக்கு இடையிலான ஒற்றுமை சீரழியும் என்பது மட்டும் உண்மை என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |