Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்று இந்த ராசிக்காரர் “போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்” இன்றைய முழு ராசி பலன் இதோ

மேஷம் ராசி அன்பர்களே !! இன்று உங்களுடைய இனிய வார்த்தையால் பிறரைக் கவரக் கூடியவராக  இருப்பீர்கள். வாழ்கை தரம் உயர்தக  அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும் குடும்பத்தில் சுப விஷய பேச்சுக்கள் நடந்தே தீரும்.

இன்று  தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தை கொடுப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவார்கள். இன்று செயல்திறன்  அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பார்கள் வெற்றி வாய்ப்பையும் பெறுவார்கள். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தல்  உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் விலகி செல்வ செழிப்புடன் இருக்கலாம்.

இன்று உங்களுக்கான…

அதிஷ்டமான திசை         :           வடக்கு

அதிஷ்டமான எண்        :            2 மற்றும் 7

அதிஷ்டமான நிறம்          :         நீலம் மற்றும் பச்சை நிறம்

 

ரிஷபம் ராசி அன்பர்களே…!!இன்று உறவினரின் பாசத்தை கண்டு நெகிழ்வீர்கள் தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது  அவசியம் வருமானம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வார்கள். திட்டமிட்ட வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும் புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும் பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்று அரசாங்கம் தொடர்பான காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். உத்தகத்தில் பதவி உயர்வு ஏற்படும் .நீண்ட தூரப் பயணங்களால் காரிய அனுகூலமும் ஏற்படும் .சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்னேறிச் செல்வார்கள்.  இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கு..

அதிர்ஷ்டமான திசை     :      தெற்கு

அதிர்ஷ்டமான எண்       :       5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம்        :      வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று தங்கள் சொந்த பணியில் ஆர்வம் கொள்வீர்கள் உறவினர் செயலைக் குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் இதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட கூடும் வெளியீட்டில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும்.

போட்டிகளில் பங்குபெற ஆர்வம் உண்டாகும். இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். தூர தேசத்து பயணம் வெற்றியை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நிதானமாக செயல்பட்டு வெற்றியை ஈட்டி விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல். இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காகத்திற்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கருமை தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கு

அதிஷ்டமான திசை        :    தெற்கு

அதிஷ்டமான  எண்         :    4 மற்றும் 7

அதிஷ்டமான  நிறம்       :  சிவப்பு மற்றும் வெள்ளை

 

 

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று திட்டமிட்ட பணிகள்  நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள் . தொழில் வியாபாரத்தில் உள்ள அநுகூலத்தை மற்றவரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். ரகசியத்தை கூடுமான அளவு நீங்கள் பாதுகாக்க வேண்டும். கூடுதல் வருமானத்தால்  தேவை அனைத்தும் நிறைவேறும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குவன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் பலவகையான யோகத்தை அனுபவிக்க கூடும். புனித ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள்  ஒரு பொன்னான நாளாக  இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடத்தைப் படியுங்கள் படித்த பாடத்தை எழுதி பாருங்க ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும் .அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்டமான திசை             :              வடக்கு

அதிஷ்டமான  எண்               :              4 மற்றும் 8

அதிஷ்ட்டமான  நிறம்          :              சிவப்பு மற்றும் ஊதா

 

சிம்மம் ராசி  அன்பர்களே!! இன்று அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தின்  வளர்ச்சி  பணியுல் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும் .பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள் இன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகிச்செல்லும்.

எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகளும் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும்  உங்களுக்கு கிடைக்கும் . தர்ம சிந்தனை இன்று அதிகரிக்கும். தர்மத்திற்காக சிறு தொகையை இன்று செலவிடுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின்  ஒத்துழைப்பும் சக மாணவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்டமான திசை          :        தெற்கு

அதிஷ்டமான எண்           :         3 மற்றும் 6

அதிஷ்டமான  நிறம்        :         ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று  உங்களுடைய நல்ல செயலால் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாக மாறும் . பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும் இஷ்ட்ட  தெய்வ வழிபாடு சிறக்கும்.இன்று கணவர் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும் .பிள்ளைகளால் பெருமை சேர்க்க அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள்

இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செய்வதில் விருப்பம் ஏற்படும். இன்று கூடுமானவரை பணம் கடன் வாங்காதீர்கள்.  அதுமட்டு மில்லாமல் இன்று  ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.இன்று  மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும் படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம்  அதிர்ஷ்ட்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில்  இருக்கும் அதுமட்டுமில்லாமல். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னதானமாக குடுத்தாள் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்டமான திசை             :                  தெற்கு

அதிஷ்டமான எண்              :                 2 மற்றும் 5

அதிஷ்டமான  நிறம்                :                பச்சை மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவிதமான பழக்கவழக்கங்களையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் சிரமங்களை தாமதமின்றி சரிசெய்வது அவசியம், பணவரவை விட இன்றைக்கு அனைத்து விஷயங்களிலும் செலவு கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி விஷயத்தில் வெளியே செல்வதாக இருந்தால் உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். தொழில் வியாபாரம் ஓரளவு நல்ல படியாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கையில் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக தான் முடியும்,  உத்தியோகத்திலிருப்பவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு நன்மை அளிப்பார்கள்.

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க கூடிய அளவில் இன்று  வாய்ப்புகளும் உங்களுக்கு அமையும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்றைய நாள் எந்தவித பிரச்சனையும் இல்லை, சிறப்பான நாளாக தான் உள்ளது. இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடங்களை இன்று  எழுதிப் பாருங்கள்,

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலேயே இருக்கும், அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

 

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு பிரச்சினையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்லும் நாளாக இருக்கும். ஒருமுக தன்மையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை வருடும் விதமாக இருக்கும். இன்று  குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.

மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள், கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலை காணப்படும். பிள்ளைகளால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். இன்று  கூடுமானவரை கொஞ்சம் நிதானத்தை மேற்கொள்ளுங்கள், அது போதும். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

முக்கியமாக பெரியவர்களிடம் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை கேளுங்கள் ஒன்றும் தவறு இல்லை. இன்று  காதல் கைகூடும் நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டு துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறத்தைக் கொடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

  அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

 

தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் நம்பிக்கையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்று பணத் தேவைகள் ஏற்படும், இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம், ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும், வாகன யோகம் கிடைக்கும் ,எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகும். இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் கடுமையான உழைப்பு இருக்கும். உழைப்புடன் பாடங்களை சிறப்பாக படித்து முன்னேறி செல்வீர்கள். இன்று  ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேளுங்கள், அது போதும்.
இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் .
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் ; வெள்ளை மற்றும் இளம் பச்சை

மகரம் ராசி அன்பர்களே, இன்று மனதில் நம்பிக்கை குறைவு போன்றவை ஏற்படக்கூடும், திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாக கூடும், தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். இன்று  சீராக தான் வந்துசேரும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற கூடுதல் முயற்சி அவசியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி போன்றவை ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள். பயணங்களில் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடு வேற்றுமை போன்றவை ஏற்படும் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் கல்வியில் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான  திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

 

கும்பம் ராசி அன்பர்களே, இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள்,. சுயலாபத்திற்காக சிலர் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவார்கள். இன்று கவனமாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் இன்று  நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.  இன்று உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும்.

இன்று பணவரவு அளவான பணவரவு இருக்கும், வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமூகமாக பேசி பழகுவது ரொம்ப நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும், குடும்ப கவலை தீரும், மனக்குழப்பம் நீங்கும், முக்கிய முடிவுகள் இன்று நீங்கள் எடுக்கக் கூடும்.

உங்களுடைய தெளிவான சிந்தனையை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித சிரமமும் இல்லாமல் பாடங்களை படிப்பார்கள். கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்ல செல்வத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீலம்

 

மீனம் ராசி அன்பர்களே, இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும், உண்மை நேர்மைக்கு  முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும், பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும், மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.  குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும்.
குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும், கணவன் மனைவிக்கு இடையே சகஜமான நிலையே காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும், அந்த வருகை கொஞ்சம் செலவை ஏற்படுத்தும். யாரிடம் பேசும்பொழுதும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் பண்ணாதீர்கள். அதுமட்டுமில்லாமல் பணக்கடன் மட்டும் இன்று  வாங்காதீர்கள். அதேபோல இன்று நேர்த்தியான ஆடை அணிந்து அனைவரையும் கவரும் விதமாகவே இருப்பீர்கள். இன்று  உங்களுடைய வசீகரத் தன்மை அனைவரையும் கவரும், காதலில் பயப்பட கூடிய சூழல் இருக்கிறது. இன்று  மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மனநிலையை அடையக்கூடும்.
மற்றவரின் ஆதரவும், ஆசிரியர்களின் ஆதரவும், முழு ஆதரவும், உங்களுக்கு கிடைக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம்  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:  3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீலம்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |