Categories
ஆட்டோ மொபைல்

ஒருமுறை சார்ஜ் போட்டால்…. 7 மாசத்திற்கு ஓடும் எலக்ட்ரிக் கார்…. அசத்தலான அறிமுகம்….!!!!

ஒரு முறை சார்ஜ் போட்டால் 7 மாதங்களுக்கு ஓடும் நவீனரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது லை இயர் ஜீரோ என்ற நிறுவனம். இந்த காரில் லித்தியம் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 கிலோமீட்டர் ஓட்டினால் இந்த கார் சுமார் ஏழு மாதங்களுக்கு ஓடும் என்று அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த காரின் விலை 2 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |