லாரியில் இருந்து சாலையில் தவறி விழுந்த மூட்டைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் அதிக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த தவிட்டு மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது