”கைதி 2” படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார்.
இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீசானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வசூலை குவித்து வருகிறது.
இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ”கைதி 2” படம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் கைதி படத்தில் டில்லி பெரிய கபடி பிளேயர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் டில்லி மிகப்பெரிய கபடி பிளேயர் என்பதை காண்பிப்பேன் என கூறியுள்ளார்.