Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் கொள்ளை…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்த புரோகிதர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்னதானம் வாங்கி கோவிலின் மூலஸ்தானம் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது விஜயா தனது கையில் வைத்திருந்த சுருக்குப் பையை அங்கு வைத்துவிட்டு கைகழுவ சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்தபோது அங்கிருந்த சுருக்குப்பை காணவில்லை. அதில் வங்கி ஏ.டி.எம். கார்டை ரகசிய குறியீட்டு எண்ணுடன் வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா கோவிலின் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் சுருக்குப்பை கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜயாவின் தாயார் அவருக்கு ரூ.25 ஆயிரம் வங்கியில் போட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அந்த பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த பணத்தை யாரோ எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விஜயா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் புதுத்தெருவில் வசிக்கும் புரோகிதர் அமிர்தகடேஸ்வரன் என்பவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அமிர்தகடேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |