தடையை மீறி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் விடுமுறை நாளான நேற்று வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் திரண்டு காணப்பட்டனர்.
இந்நிலையில் அங்குள்ள கூலாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆற்றில் குளித்துள்ளனர்.