கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் நாணயமானது அதிக அளவில் பிரபலமானது. கைகளால் பரிமாற்றம் செய்ய முடியாத அந்த நாணயத்திற்கு சட்ட விதிமுறைகள் கிடையாது. டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க பலரும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது ஒன்றரை வருடங்களில் இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு சரிவடைந்திருக்கிறது. பிட்காயினின் மதிப்பானது 25 ஆயிரம் டாலரை விட குறைந்து விட்டது. எனவே, பிட்காயின் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.