உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன.
ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் எரிவாயு, கச்சா எண்ணையில் தங்களுக்கான 60 சதவீத தேவையை ஐரோப்பிய நாடுகள் பெற்று வருகின்றன. அதேசமயத்தில், சீனா 13.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்திருக்கிறது.
இதே போன்று, இத்தாலி நாடு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களும், துருக்கி 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், போலந்து 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்தியா 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள், நெதர்லாந்து 8.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள், பிரான்ஸ் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருக்கின்றன. எனவே, ரஷ்யா மொத்தமாக உக்ரைன் போருக்குப்பின் 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் பெற்றுள்ளது