Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் கரு முட்டை விற்பனை வழக்கு…. கைது செய்யப்பட்ட பெண் தரகர்…. வங்கிக்கணக்குகள் அதிரடி ஆய்வு….!!!!!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் பெருந்துறை மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மருத்துவமனையிலிருந்து திருப்பதிக்கும் சிறுமி அனுப்பி வைக்கப்பட்டு கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைகளுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் இருந்து கருமுட்டை எடுப்பதற்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் திருச்சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடமும் ஈரோடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கூடுதல் ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அவர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு இருக்கின்றனர் இதற்கிடையே கைதான ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி தரகர் மாலதியின் இரண்டு வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மருத்துவமனைகளின் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு நாட்களில் தலா 20 ஆயிரம் வீதம் தரகரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலால் போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் புகார் அளித்தது மட்டுமல்லாமல் மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்களிடமும் கருமுட்டை தானம் என்ற பெயரில் தரகர் மாலதி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டையை விற்பனை  செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |