Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீடு கட்டி வந்த குடும்பத்தினர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேல்கடையநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சொந்த வீடு இல்லாததால் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் பாண்டியின் மனைவி மற்றும் மகள்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் பாண்டி கட்டுமான பொருட்களை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் எடுத்து விற்பனை செய்துள்ளார். இதனால் பாண்டியை அவர்கள் கண்டித்தனர்.

இதில் மனமுடைந்த பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |