Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“30-வது திருமண நாளை கொண்டாடிய சமந்தாவின் மாஜி மாமனார்”…. நன்றி கூறி டுவிட்டர் பதிவு…!!!!

நடிகர் நாகார்ஜுனா தனது 30 ஆவது திருமண நாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சென்ற வருடம் அவரை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தனது 30 ஆவது திருமண நாளை சென்ற 11ஆம் தேதி கொண்டாடியுள்ளார். அதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி இருந்தனர். இந்நிலையில் தனது மனைவி அமலாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து அமலா மீதும் என் மீதும் பொழிந்த அன்புக்கும் ஆசிகளுக்கும் அனைவருக்கும் நன்றி. முப்பது வருடம் ஒற்றுமை. இன்னும் பல வருடங்கள் உங்கள் வாழ்த்துக்களுடன் வரட்டும் என பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |