பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர்.
ஆனால் பேருந்துகள் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு அதிக அளவில் இயக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.