Categories
மாநில செய்திகள்

திருமணமான 5 நாளில்…. பதற… கதற…. அதிர வைக்கும் சம்பவம்….!!!!

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவருக்கு வயது 24. இவர் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் என்பவரை காதலித்து சரண்யா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இது பெற்றோர்களுக்கு தெரிய வர மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளனர்.

இதனை நம்பி இருவரும் செல்ல,சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் உறவினர்கள் ரஞ்சித் இருவரும் சேர்ந்து புதுமண தம்பதியை அரிவாளால் வெட்டியதில் அதே இடத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஆவணக்கொலை ஆக கருதப்படும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Categories

Tech |