தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை உயர்த்துதல், வளைவுகளை நீக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ரயில் வந்தால் சில மணி நேரங்களில் மதுரை செல்ல முடியும். இந்தியாவில் தற்போது குஜராத், மகாராஷ்டிராவில் அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.