கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று கோவையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் என்ற பார்வையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. வாரம் ஒரு முறை செல்லக்கூடிய இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
அதற்கான டிக்கெட் கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சாய்பாபா கோவில் களில் கிடைக்கும் என்று தனியார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ரயில் கட்டணம் மட்டும் பேக்கேஜ் கட்டணம் என்று இரண்டு வகையான கட்டணங்கள் உள்ளன. அதாவது கோவையில் இருந்து சீரடி செல்ல 1,458 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,280ஆனால் தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரயில் கட்டணம் 2,500 ரூபாய் மற்றும் பேக்கேஜ் கட்டணம் 4,999 ரூபாய் மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில் கட்டணம் 2,360 ரூபாய் ஆனால் தனியார் ரயில் கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999 ரூபாய். அனைத்திற்கும் இதனைப் போலவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.