Categories
உலக செய்திகள்

அடடா! சூப்பர்…. பூகம்பத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…. எலிகளுக்கு சிறப்பு பயிற்சி…. அசத்தும் விஞ்ஞானிகள்….!!!

எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்கொட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் வசிக்கும் விஞ்ஞானி டோனோ கீன் தலைமையிலான குழு எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். அதாவது பூகம்பம் மற்றும் நில நடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்காக எலிகளுக்கு ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மைக்ரோபோனை  பொருத்தி சிறிய பேக் பேக்குடன் எலிகளுக்கு அணிகின்றனர்.

இந்த மைக்ரோபோன் மூலமாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் பேசலாம். இதனையடுத்து மைக்ரோபோன் பொருத்தப்பட்ட பேக் பேக்குடன் ஒரு சுவிட்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடிபாடுகளை சிக்கியவர்களை கண்டால் எலிகள் பேக் பேக்கில் இருக்கும் சுவிட்சை அமுக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |