Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. முழு பாடமும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்ததால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு குறைந்த அளவிலான பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது.

தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் மாணவர்கள் அனைவரும் பள்ளி திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில்தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் முழு பாடத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த கல்வியாண்டில் முழு பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |