1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு 39%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 35%, 1 -9ஆம் வகுப்புக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 1 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்புக்கு 20ஆம் தேதியும், பிளஸ் 1-க்கு 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.