Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி… -மத்திய சுகாதாரத்துறை மந்திரி….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறையானது முடிந்து இப்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்டவியா, கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக மாநில சுகாதார மந்திரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மன்சுக்மாண்டவியா கூறியிருப்பதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும். பள்ளிக்குழந்தைகள் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். முதியோருக்கான பூஸ்டர் தடுப்பூசியும் அதிகம் செலுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |