மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெனசி கிராமத்தில் கூலித் தொழிலாளியான விநாயகம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மோளையானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.