20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயகர் நகரில் சித்த மருத்துவரான மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21-5-2002 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மலர்க்கொடியை கொலை செய்துவிட்டு 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடியை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி, ராமகிருஷ்ணன், சக்திவேல் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அழகர்சாமி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ஆனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டு விடுதலை ஆகிவிட்டனர். ஆனால் ராமகிருஷ்ணன் கேரளாவிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ராமகிருஷ்ணன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து தைரியமாக வாழ ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ராமகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.