Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களே!…. இதை பாலோவ் பண்ணுங்க…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தடைகாலம் முடிந்து கடலுக்கு போகும் மீனவர்களுக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் வருடந்தோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி முடிய மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைபடுத்தப்படும். இவற்றில் பைபர் படகை தவிர்த்து, விசைப்படகுகள் மற்றம் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த வருடத்துக்கான மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப் படகு மீனவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க போகும்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது,

# மீன்பிடி விசைப்படகில் கடலுக்கு போகும் மீனவர்களின் விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பதிவுசெய்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற பின்பே கடலுக்கு செல்ல வேண்டும்.

# மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க போகும்போது உயிர்காக்கும் கவசஉடைகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும்.

# மீன்பிடி படகுகள் இந்திய சர்வதேச எல்லைக் கோட்டினைத் தாண்டி மீன்பிடிக்ககூடாது.

# தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது.

# தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தொழில் செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |