Categories
தேசிய செய்திகள்

“முறையாக பேருந்து சேவை இல்லை”…. குழப்பத்தில் பொது மக்கள்…. கரூரில் நடந்தது என்ன…?

தமிழ்நாட்டின் மையமாக கருதப்படும் கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு கூட இங்கிருந்து பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதோடு ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளுக்கும் கரூர் மாவட்ட மிக முக்கியமானதாகும். அரசியல் என்று கூற காரணம் கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழகம் உற்றுநோக்கும் அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என முக்கிய தலைவர்களின் சொந்த மாவட்டம் கரூர் தான்.

அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சர்களாக இந்த மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி, எம் ஆர் விஜயபாஸ்கர் போன்றோர் இருந்திருக்கின்றனர். ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கரூரில் முறையாக பேருந்து சேவை இல்லை என்பது தற்போது பொதுமக்களின் புலப்பமாக  இருக்கின்றது. கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு மேல் திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக புதன்கிழமை முகூர்த்த தினம் என்பதால் பலரும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணம் மேற்கொண்டனர். திருச்சியில் பாஜக பேரணிகள் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் சரியாக 40 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டதால் அதில் பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு பயணம் மேற்கொண்டனர். இந்த காட்சிகளை இணையத்தில் பதிவிட்டுள்ள பலரும் கரூரிலிருந்து வெளியூருக்கு செல்ல இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதி இருப்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.

Categories

Tech |