அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை கோவில் சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர. இந்த ரோப்கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை ரசித்தபடி செல்வதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரோப் கார் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை சேவை இயக்கப்படுகிறது. இதனால் தினந்தோறும் 1:30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுகிறது.
அதனை போல மாதத்துக்கு ஒருமுறையும் வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு பராமரிப்பு பணிகள் நாளை முதல் அடுத்த மாதம் ஜூலை வரை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் புகார் பெட்டிகள் கட்டப்பட்டு முக்கிய பாகங்களை பரிசோதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் பழுது ஏற்பட்டு இருந்தால், அது உடனடியாக அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்படும். அதன் பிறகு சோதனை ஓட்டம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் சேவைக்காக இயக்கப்படும். இதனால் நாளை முதல் பழனிக்கு வரும் பக்தர்கள் படி பாதை வழியாக அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.