காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாவட்டத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(19) என்ற மகள் உள்ளார். இவர் சென்னை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த 11-ஆம் தேதி சரஸ்வதி பேருந்தில் திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு சரஸ்வதி பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சரஸ்வதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சாம்பசிவம் திண்டிவனம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சரஸ்வதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.