தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வுகளும் முடிந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.